|
மாடுகளுக்கு வயிற்று உப்புதல் |
இந்நோயினைப் பற்றி |
|
மாடுகளின் வயிற்றில் நொதித்தல் மூலம் உண்டாகும் அதிகப்படியான வாயுவினால் வயிறு உப்புதல் ஏற்படுகிறது. |
நோய்க்கான காரணங்கள் |
|
- தீவனம் நொதிக்கும் போது உண்டாகும் வாயு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து வயிற்றிலிருந்து காற்று வெளியேறுவது தடுக்கப்பட்டு விடுதல்
- நிலையான நுரை வயிற்றில் உண்டாதல்
- மாடுகளின் அசையூண் வயிற்றில் நுரைப்புத் தன்மை ஏற்படுதல்
- புரதச்சத்து கொண்ட பயிறு வகைத் தீவனங்களான ஆல்பால்பா போன்றவற்றின் இளம் இலைகளை மாடுகள் உண்ணும் போது அவற்றில் இருக்கும் அதிகப்படியான கரையும் புரதச்சத்து மற்றும் இளம் தானியப் பயிர்களை மேய்வது போன்றவை வயிறு உப்புதல் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
- அதிக தரம் வாய்ந்த வைக்கோலைத் தீவனமாக அளித்தல்
- அதிக தானியங்கள் நிறைந்த தீவனத்தினை மாடுகளுக்கு அளித்தல்
- நன்றாக மாவு போன்று அரைக்கப்பட்ட தீவனத்தினை மாடுகளுக்கு அளித்தல்
- உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வயிற்றிலிருந்து காற்று வெளியேறுவது தடுக்கப்படுதல்
|
அறிகுறிகள் |
|
மருத்துவ அறிகுறிகள் |
|
- அசையூண் வயிறு உப்பிக் காணப்படுதல் அல்லது வயிற்றுப்பகுதி முழுவதும் உப்பிக் காணப்படுதல்
- மாடு நடக்க சிரமப்படுதல், அடிக்கடி படுத்து எழுந்திரித்தல், தரையில் உருளுதல், வயிற்றை நோக்கி அடிக்கடி உதைத்துக் கொண்டிருத்தல்
- வயிறு உப்புதலின் காரணமாக ஏற்படும் திடீர் இறப்பு
- மூச்சு விட சிரமப்படுதல், வலியின் காரணமாக பற்களைக் கடித்தல், வாய் மூலம் மூச்சு விடுதல்
- நாக்கு வெளியே துருத்திக் கொண்டு தலையினை நீட்டிக் கொண்டு இருத்தல்
|
மேலாண்மை முறைகள் |
|
பரிந்துரைக்கப்படும் முதலுதவி |
|
- உணவுக்குழாய் மூலமாக வயிற்றுப் பகுதிக்கு குழாயினை செலுத்தியோ அல்லது வயிற்றுப்பகுதியில் ஓட்டையிட்டோ வயிற்றிலிருக்கும் அதிகப்படியான வாயுவினை வெளியேற்றலாம்.
- மாட்டின் இடப்புற வயிற்றுப்பகுதியின் மேற்பகுதியிலுள்ள முக்கோணம் போன்ற பகுதியில் 10-20 செமீ அளவிற்கு தோலைக் கிழித்து பின்பு வயிற்றினை கிழித்து விட வேண்டும்.
- மாடுகளின் வாயில் ஒரு குச்சியினை எப்பொழுதும் இருக்குமாறு வைத்து விட வேண்டும். இதனால் அதிகப்படியாக வாயில் எச்சில் உற்பத்தியாகும். இந்த எச்சில் வயிற்றுக்குள் சென்று வாயுவின் உற்பத்தியைக் குறைக்கும்.
- நுரைப்புத் தன்மையினைத் தடை செய்யும் தாவர எண்ணெய்களான மக்காச்சோள எண்ணெய், சோயா எண்ணெய் அல்லது பாரபின் போன்றவற்றை 80-250 மிலி என்ற அளவிற்கு மாடுகளின் வாயில் ஊற்றவேண்டும்.
|
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் |
|
- மாடுகளுக்கு புரதச்சத்து மிகுந்த பயறு வகை பசுந்தீவனங்களை அளிக்கக்கூடாது.
- மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் விடுவதற்கு முன்பு அவைகளுக்கு வைக்கோலைத் தீவனமாக அளித்தல்
- மாடுகளின் மேய்ச்சல் நிலத்தில் புல்வகைகளை அதிகமாக வளர்த்து நுரைப்புத் தன்மையினை ஏற்படுத்தும் தீவனங்கள் எடுக்கும் அளவினைக் குறைத்தல்
- இளம் பசுந்தீவனங்களுக்குப் பதிலாக நன்கு வளர்ந்த தீவனங்களை மாடுகளுக்கு அளித்தல்
- பசுந்தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கும்போது அவற்றில் 50% மட்டுமே பயறுவகைத் தீவனம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுவது வயிறு உப்புசம் ஏற்படுவதைத் தவிர்க்கும்
- அதிக எரிசக்தி, அதிக புரதம் நிறைந்த தீவனங்களை மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது.
- வயிற்றில் நுரை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்களை 60-120 மிலி தினமும் இரண்டு வேளை (பால் கறக்கும் போது) அளித்தல்
- மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில், குறைந்தபட்சம் 10-15% நறுக்கப்பட்ட உலர் தீவனங்களை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்கவேண்டும். உலர்தீவனங்கள் பொதுவாக தானிய வகைகளின் தட்டுகள், காய்ந்த புற்கள் போன்றவையாக இருப்பது நல்லது
- மாடுகளுக்கு தானியங்களைத் தீவனமாக அளிக்கும்போது அவற்றை ஒன்றிரண்டாக அரைத்து கொடுக்கவேண்டும். நன்றாக மாவு போன்று அரைத்து கொடுக்கக்கூடாது.
- மாடுகளுக்கு குச்சித் தீவனங்களை தயாரிக்கும்போது அதில் நன்கு மாவு போன்று அரைத்த தானியங்களைச் சேர்க்கக்கூடாது.
|
இந்நோயினைப் பற்றி |
|
- மாடுகளின் குடலில் உட்பகுதியிலுள்ள மெல்லிய சவ்வு போன்ற படலத்தின் அழற்சி காரணமாக மாடுகளுக்கு கழிச்சல், இரத்தத்துடன் கூடிய கழிச்சல், வயிற்றுவலி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதுடன், மேற்கூறிய கோளாறுகளால் அவற்றின் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை, அமில-கார சத்துகளின் சரிவிகிதம் மாறுபடுதல் போன்ற இதர கோளாறுகளும் ஏற்படுகின்றன.
|
நோய்க்கான காரணங்கள் |
|
- குடலில் நோயினை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள், குடற்புழுக்கள், இரசாயனங்கள் மற்றும் விசத்தன்மை வாய்ந்த பொருட்கள்
|
நோய் அறிகுறிகள் |
|
- கழிச்சல்
- நீர்ச்சத்து பற்றாக்குறை, வயிற்றுவலி, காய்ச்சல்
- சாணம் மென்மையாக, திரவமாகக் காணப்படுதல், துர்நாற்றம் அடித்தல்
- சாணத்தில் இரத்தம், கோழை மற்றும் மண் போன்ற பொருட்கள் காணப்படுதல்
- சாணம் வெளிர் மஞ்சள் நிறமாக இருத்தல், சில சமயங்களில் இரத்தத்துடன் காணப்படுதல்
- மாடுகளின் தொடைப்பகுதியில் சாணம் ஒட்டியிருத்தல்
|
மடிக்காம்பில் ஏற்படும் அழற்சி |
இந்நோயினைப் பற்றி |
|
- மாடுகளின் மடிக்காம்பு பாதிக்கப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
- பால் கறவை காலத்தில் இருக்கும் மாடுகள் பொதுவாக இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலின் நிறத்திலோ அல்லது தன்மையிலோ எந்த மாறுபாடும் காணப்படாது.
- இந்நோயினால் பால் உற்பத்தி குறைகிறது.
- சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் பாதிக்கப்பட்ட காம்புகள் முற்றிலும் சேதமடைந்துவிடும்.
|
நோய் அறிகுறிகள் |
|
- பாதிக்கப்பட்ட மாட்டின் காம்பு சிவந்தும் பின்பு வீங்கியும் காணப்படும்.
- பால் உற்பத்தி குறைதல்
- அதிகப்படியான நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட காம்பு சேதமடைதல்
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் |
|
- மாடுகளின் சுற்றுப்புறம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும்.
- மாட்டுக்கொட்டகையின் தரையினை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
- பால் கறப்பதற்கு முன்பு பால் கறப்பவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
- பால் கறக்கும்போது காம்புகளை கிருமி நாசினி கலந்த கரைசலில் முக்கி எடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் நோய்க்கிருமிகள் மடிக்காம்புக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.
- நோயுற்ற மடிக்காம்புகள் சேதமடைவதைத் தடுக்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
- தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டே பாதிக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.
- மாடுகளின் காம்புகள் காயங்கள் ஏற்படாமலும், புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட காம்புகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத காம்புகள் முழுவதுமாக சேதமடையும்.
|
மாடுகளின் வயிறு மற்றும் குடல் சவ்வில் ஏற்படும் அழற்சி |
இந்நோயினைப் பற்றி |
|
- கறவை மாடுகள் மேயும்போது கூர்மையான பொருட்களான ஆணி, கம்பி மற்றும் இதர இரும்பாலான பொருட்களை தவறுதலாக புற்களுடன் சேர்ந்து விழுங்கி விடுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
- இந்த கூர்மையான பொருட்கள் வயிற்றுக்குள் சென்றவுடன், ரெட்டிக்குளம் எனப்படும் மாடுகளின் இரண்டாம் வயிற்றுக்குள் சென்று அதனை துளைத்து குடலைச் சுற்றியுள்ள சவ்வை துளைத்துப் பின்பு இதயத்தையும் துளைத்து விடும்.
- சினையுற்ற மாடுகள், சினையற்ற மாடுகளை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
- இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் பிழைப்பது கடினம்.
|
நோய்க்கான காரணங்கள் |
|
- கூர்மையான இரும்புப் பொருட்களை தெரியாமல் மாடுகள் புற்களுடன் விழுங்கிவிடுவதால் இந்நோய் ஏற்படுகிறது. வயிற்றுக்குள் செல்லும் இப்பொருட்கள் பின்பு இதர உறுப்புகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
- கூர்மையான இரும்புப் பொருட்களான ஆணிகள், கம்பிகள், ஹேர்பின்கள், துணி தைக்கப் பயன்படும் ஊசிகள், மற்ற இதர துளையிடும் ஊசிகள் தீவனத்தில் இருத்தல்.
- கடினமான, கூர்மையுள்ள மேற்கூறிய பொருட்கள் தூக்கியெறியப்படும் மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்தல்.
|
நோய் அறிகுறிகள் |
|
- காய்ச்சல்
- தீவனம் உட்கொள்ளாமை
- மாடுகளின் முதுகு வளைந்து, மடக்கிய முன்கால்களுடன் நிற்பது
- இதயத்துடிப்பில் மாற்றம் காணப்படுதல்
- கழுத்திலுள்ள ஜூகுலார் தமனியில் துடிப்பு காணப்படுதல்
- நெஞ்சுப்பகுதியில் வீக்கம்
- பால் உற்பத்தி குறைதல்
|
நோய் கண்டறியும் பரிசோதனைகள் |
|
- பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்த நாளங்களில் கைகளால் அழுத்தம் கொடுக்கப்படும் போது கைகளுக்கு இரண்டு புறமும் இரத்தம் தேங்குதல்
- ஆனால் நோய் பாதிப்பற்ற மாடுகளில் அழுத்தம் கொடுக்கப்படும் கையின் ஒரு புறம் மட்டுமே இரத்தம் தேங்கும்
- பாதிக்கப்பட்ட மாடுகளை சரிவான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு ஓட்டிச் செல்லும் போது அவை மெதுவாக நடப்பதுடன், நடப்பதற்கு சிரமப்படுதல்
|
நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் |
|
- தீவனத்துடன் சேர்த்து கூர்மையான இரும்புப்பொருட்களை மாடுகள் விழுங்கி விடுவதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே தீவனத்தில் இப்பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
- மாடுகளின் கொட்டகை மற்றும் மேய்ச்சல் இடங்களில் மேற்கூறிய பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
- கட்டிடம் கட்டப்படும் இடங்களில் மாடுகளை கட்டக்கூடாது.
- வயல்களில் இரும்புப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
- அரைத்த தீவனத்தினை மாடுகளுக்கு கொடுப்பதற்கு முன்பாக தீவனத்தினை காந்தத்தின் மீது செலுத்தினால் அதில் ஏதேனும் இரும்புப் பொருட்கள் இருந்தால் காந்தம் இழுத்துவிடும்.
- நோயின் ஆரம்ப காலத்தில் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.
- நோய் முற்றிய நிலையில் இருந்தால் பாதிக்கப்பட்ட மாடுகள் பிழைப்பது கடினம்.
|
|